2023ம் ஆண்டு பெப்ரவரி மாதம் அளவில் பாடசாலையின் அதிபர். M.L.பதியுத்தின் அவர்களின் அனுமதியுடன் சித்திரக் கலைக்கூடமானது முதற்கட்டமாக ஆரம்ப வேலைகள் யாவும் பாடசாலையின் சித்திர பாட ஆசிரியர் திரு.வி.மோனுஐன் அவர்களினால் மாணவர்களின் உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ச்சியாக கலைக்கூடத்தில் ஓவியங்கள் மற்றும் படைப்பாக்கங்கள் செய்யப்பட்டன. அதனைத் தொடர்ந்து கலைக்கூட வேலைகள் யாவும் ஜுன் மாதம் நிறைவு பெற்று தொடர்ந்து பாடசாலையின் மாபெரும் சித்திர கண்காட்சியானது 2023 06 மாதம் 26 தொடக்கம் 27 வரை பாடசாலையின் அதிபர் தலைமையில் ஆசிரியரினால் “சித்திரச் சிதறல்கள்” எனும் தலைப்பில் நடைபெற்றது.





