ஆதியே இறைவா அருள் மறையோனே
அறிவொளி தருவாயே - இறைவா
அறிவொளி தருவாயே
புவிதனில் உயர்ந்த புனிதர்கள் வழியில்
புகழ்பெறவே அருள்வாய் - இறைவா
புகழ்பெறவே அருள்வாய்
நெல்மிகும் நற்பிட்டிமுனை
அல் - அக்ஸா மத்திய மகா வித்தியாலயம்
பல் வளம் சிறக்க – பாரினில் வியக்க
பணி புரிந்தொளி பெறவே - இறைவா
பணி புரிந்தொளி பெறவே
இறையருள் கருணை அருள் எமைச் சேர்ந்து
நிறையுயர் மாண்பு பெற
இறையுனைப் பணிந்தோம் - இருகரம் இணைந்தோம்
எமக்கருள் புரிவாயே இறைவா
எமக்கருள் புரிவாயே
இடர் நிறை புவிமிசை எதிரிடும் துயர்தனை
இலகுவில் வென்றிட நாம்
திடமிகு அறிவும் தீன் மறை நூலும்
ஓதியுணர்ந்திடவே
பல கலை ஞானம் பண்பு நற்சீலம்
மொழி வளம் திறன் வாழ்வு
நிலமிசை படரும் பொழுதொளிச் சுடராய்
ஒளி பெறவே யருள்வாய் - இறைவா
ஒளி பெறவே யருள்வாய்
அன்பு நன்நெறிகள் அறிவியல் வழங்கும்
அதிபர் எம் ஆசான்கள்
அனுதினம் மகிழ அவைதனில் உயர
அருள் புரிவாய் - இறைவா
பண்புடன் வளர்த்து பாரினில் உவக்கும்
அன்னை எம் தந்தையரும்
இன்புடன் இணைந்து
இக பரம் மகிழ
இன்னருள் வரம் அருள்வாய் - இறைவா
இன்னருள் வரம் அருள்வாய்.





