அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயம், நற்பிட்டிமுனை

தரம் 3 பண்டிகை உணவு கொண்டாட்டம்

WhatsApp_Image_2023-09-04_at_101737_AM_3.jpeg
WhatsApp_Image_2023-09-04_at_101737_AM_3.jpeg

பிரதி அதிபர் செய்தி

திரு.AM.ஜெஸீல் (SLPS-III)

பிஸ்மில்லாஹிர்றஹ்மானிர்றஹீம்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
கல்முனை கல்வி வலயத்தில் கல்முனை கல்வி கோட்டத்தில் நற்பிட்டிமுனை பிரதேசத்தில் காணப்படுகின்ற 1AB பாடசாலையான இப் பாடசாலை மிக நீண்டதொரு வரலாற்றை கொண்டதாகும். இங்கு கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுகின்ற ஆசிரியர்கள் மாணவர்கள் தங்களது தகவல் தொழிநுட்ப அறிவினை வளர்த்துக்கொள்வதற்காக மடிகணினிகள் மற்றும் ரெப்(TAB) வசதிகள் என்பன சிறந்த முறையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
இப்பாடசாலையில் தரம் 10,11,12ல் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடத்தை கற்கின்ற மாணவர்களால் பாடசாலைக்கென தனித்துவமான தரவுத்தளம்(School Website) ஒன்றை உருவாக்குவது பாராட்டத்தக்கதும் போற்றத்தக்கதுமாகும்.
“நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம் ஆனால் அனைவருக்கும் திறமையை வளர்த்துக்கொள்ள ஒரே மாதிரி வாய்பபுகள் உள்ளன”
என்ற டாக்டர் அப்துல் கலாமின் அறிவுரைக்கேற்ப நாம் அனைவரும் திறமையை வளர்த்துக்கொள்ள இது சிறந்ததோர் சந்தர்ப்பமாகும்.
மேலும் இத்தரவுத்தளத்தை உருவாக்குவதற்கு உறுதுணையாகவும்இ ஒத்துழைப்புகளையும், ஆலோசனைகளையும் வழங்கிய கல்வி அமைச்சு, மாகாண கல்வி திணைக்களம்,வலயக்கல்வி அலுவலகம்,கோட்டக்கல்வி அலுவலகம்,பாடசாலை சமூகம்,மாணவர்கள் மற்றும் ஏனையோருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.

திரு.AM.ஜெஸீல் (SLPS-III)
பிரதி அதிபர்
கமு /கமு/ அல் -அக்ஸா ம.ம.வி ..