அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலயம், நற்பிட்டிமுனை

வரலாறு

தரம் 3 பண்டிகை உணவு கொண்டாட்டம்

WhatsApp_Image_2023-09-04_at_101737_AM_3.jpeg
WhatsApp_Image_2023-09-04_at_101737_AM_3.jpeg

நற்பிட்டிமுனை அல்அக்ஸா மத்திய மகா வித்தியாலயம் கல்முனை மாநகர சபை எல்லையினுள் நற்பிட்டிமுனை எனும்; கிராமத்தில் அமைந்துள்ளது. இப்பாடசாலைக்கு நூற்றாண்டு கால வரலாறு ஒன்று காணப்படுகிறது. 1930 களில் தற்போதுள்ள சிவசக்தி மகா வித்தியாலயமும் அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலயமும் “அரசினர் தமிழ் கலவன் பாடசாலை” என்ற பொதுப் பெயரின் கீழ் ஒன்றாக இயங்கிக்கொண்டிருந்தது என வரலாற்று சான்றுகளின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. 1934 களிலேயே இப்பாடசாலை பதிவு செய்யப்பட்டது. இப்பாடசாலையின் முதலாவது அதிபராக திரு.எஸ்.ஸாமித்தம்பி என்பவர் கடமையாற்றினார். பின்னர் 1957 இல் இப்பாடசாலை தனியாகப் பிரிந்து “அரசினர் கலவன் முஸ்லிம் பாடசாலை” என்ற புதுப் பெயரில் இயங்கத் தொடங்கி பின்னர் தற்போதைய ‘நற்பிட்டிமுனை அல் அக்ஸா மத்திய மகா வித்தியாலயம் என்ற பெயரைப் பெற்றுக் கொண்டது.
ஆரம்பகாலத்தில் இப் பாடசாலையானது முன்னணிப் பாடசாலையாக திகழ்ந்த காரணத்தினால் அயல் கிராமங்களான மருதமுனைஇ கல்முனைஇ சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் இருந்து மாணவர்கள் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட்டனர். பிற்காலத்தில் பலர் உயர்ந்த பதவிகள் வகித்ததை அறியக்கூடியதாக உள்ளது. ஆனால் துரதிஷ்ட வசமாக 1967 இல் தத்தமது விருப்பத்துக்குரிய அதிபர்களை கொண்டுவர வேண்டுமென்ற மிகக் குறுகிய சுயநல இலக்கோடு இயங்கிய இரண்டு குழுக்கழுக்கிடையிலான போட்டியின் காரணமாக பாடசாலை சமுகத்தில் மிக மோசமான ஒரு சச்சரவு தோன்றியது. இவ்விரண்டு குழுக்களில் ஒன்று அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி தமக்கு விருப்பமான அதிபரை இப்பாடசாலைக்கு அதிபராகக் கொண்டுவருவதில் வெற்றி பெற்றதுஇ அதில் மிகவும் பரிதாபகரமான விளைவு என்னவென்றால் அந்த குழுக்களின் அபிமானத்திற்குரிய அந்த அதிபரின் தரம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரை வகுப்புகளைக் கொண்ட ஒரு பாடசாலையை பொறுப்பெடுப்பதற்குப் போதாதாக இருந்ததால் இப்பாடசாலையின் தரம் அந்த அதிபரின் தரத்திற்கேற்ப 8 ஆம் வகுப்பு வரை தரமிறக்கப்பட்டது. இதுவே இக்கிராமத்திற்கும் இப்பாடசாலைக்கும் செய்யப்பட்ட மிகப்பெரி;ய வரலாற்றுத் துரோகமாகும். இதிலிருந்து இப்பாடசாலையின் தரம் குறைவடைந்ததுடன் அதிலிருந்து ஊருக்கு வெளியே உள்ள பாடசாலைக்கு சென்று படிக்கும் மனப்பாங்கு இவ்வூரில் ஏற்படத் தொடங்கியதுஇ இது இப்பாடசாலையின் பின்னடைவுக்கான பிரதான காரணமாக அவதானிக்கப்படுகின்றதுஇ இதுவரை இப்பாடசாலையின் முன்னேற்றத்திற்கு இது ஒரு சவாலாகவே இருந்து வருகின்றது. மேல்மட்ட குடும்பங்களின் அதிகமான மாணவர்கள் வெளிப் பாடசாலைகளுக்கு செல்வதால் இங்குள்ள பெற்றோர் தமது ஊர்ப்பாடசாலையில் தமது பிள்ளைகளைச் சேர்ப்பது கௌரவக் குறைச்சலாகக் கருதுகிறார்கள். இதன் காரணமாக வெளிப்பாடசாலைகளுக்கு தமது பிள்ளைகளை அனுப்புவதற்கு முடியாத வறிய பெற்றோரின் பிள்ளைகளே இங்கு பெரும்பான்மை மாணவர்களாக உள்ளனர். இப்பாடசாலையின் இந்தத் தன்மையும் இப்பாடசாலையின் குறைவான தரத்;திற்கு பிரதானமான காரணமாக அமைகின்றது.வெளி ஊர்ப்பாடசாலைகளுக்கு செல்லமுடியாத பணவசதியற்ற ஏழை மாணவர்களின் பாடசாலையாகவே இப்பாடசாலை இந்த சமுகத்தால் பார்க்கப்படுகின்றது.
ஓவ்வொரு கால கட்டத்திலும் இப்பாடசாலையைப் பொறுப் பெடுத்த அதிபர்களின் தியாகத்திற்கும் அர்ப்பணிப்புக்குமேற்ப இப்பாடசாலை வளர்ச்சிகளையும் பின்னடைவுகளையும் சந்தித்துள்ளது.1987 இல் வீ.எம்.இஸ்மாயில் சேர் அவர்கள் அதிபராக இருந்த போது இப்பாடசாலை 1AC பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.
இப்பாடசாலை கடந்த2017.01.01ம் திகதி 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு மீண்டும் குறுகிய காலத்துக்குள் அதாவது 2017.11.22ம் திகதி மத்திய மகா வித்தியாலயமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.இக்காலப்பகுதியில் ALHAJ.MLA.கையூம் அவர்கள் கடமையாற்றியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.2017இ2018 களில் இப்பாடசாலையின் தரத்தை உயர்த்தும் நோக்கத்தில் கல்முனை வலயக் கல்வி அலுவலகம் “ அருகாமைப் பாடசாலையே சிறந்த பாடசாலை” என்ற அரசின் வேலைத்திட்டத்தின் கீழ் சில முயற்சிகளை எடுத்தது. தற்போது நல்லதொரு மாற்றத்தை நோக்கி பாடசாலை சற்று முன்னேறுவதை அவதானிக்க முடிகிறது. நடுத்தர உயர்தர குடும்பங்களும் கூட தற்போது தமது பிள்ளைகளை இப்பாடசாலையில் அனுமதிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். பாடசாலையின் இடைவிலகல் குறைந்து புதிய அனுமதி வீதம் அதிகரித்துள்ளது. தற்போது தரம் 1ல் இருந்து தரம் 13 வரை வகுப்புக்கள் உள்ளன. இம்மாணவர்கள் வறுமையாக இருந்தாலும் அதிகமானவர்கள் கெட்டிக்காரர்களாகவும்; ஆர்வமுள்ளவர்களாகவும் காணப்படுகின்றனர். ஆனால் இவர்கள் வறிய குடும்பத்தை சேரந்தவர்கள் என்பதால் இவர்களின் அடைவு மட்டத்தை அதிகரித்து இப்பாடசாலையின் தரத்தை உயர்த்துவதற்கு வெளி அமைப்புக்கள் நிதி உதவியுடன் குறுங்கால நெடுங்கால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியும்.