அதிபர் செய்தி
திரு.மீ.லெ.பதியுத்தீன்(SLPS-I)
ஏறக்குறைய 75 வருட வரலாற்றைக் கொண்ட இந்தப் பாடசாலையானது இப்பிரதேசத்திலே ஒரு முன்னணிப் பாடசாலையாக சுடர்விட்டு பிரகாசித்ததை பாடசாலையிலுள்ள ஆவணங்களின் மூலம் அறியக்கூடியதாக உள்ளது. இன்று பாடசாலையில் ஏறக்குறைய 525ற்கு மேற்பட்ட மாணவர்கள்,42ற்கு மேற்பட்ட ஆசிரியர்களுடன் கற்றல் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடுவதோடு 7ற்கு மேற்பட்ட கல்விசாரா ஊழியர்களின் உதவியோடு இயங்கிக்கொண்டிருக்கிறது. இப்பாடசாலையின் உயர்தரப்பிரிவில் கலை,வர்த்தக,தொழிநுட்ப பிரிவில் கல்வி கற்கின்ற மாணவர்களே தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப பாடத்தினை ஒரு பாடமாக கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இப்பாடசாலையில் “அண்மித்த பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற செயற்றிட்டத்தின் கீழ் 48 TAP கணினிகளுடன் கூடிய தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப ஆய்வுகூடம் ஒன்று நிறுவப்பட்டு மாணவர்களின் பயன்பாட்டிற்காக தினமும் பயன்படுத்தப்படுவதோடு வெற்றிகரமான கற்றல் கற்பித்தல் செயலொழுங்கினை ஆசிரியர்கள் மேற்கொள்வதற்கு துணைபுரிகிறது. அது மட்டுமல்லாமல் அண்மையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதிஉதவிகள் மூலம் செசிப்(SESIP) திட்டத்தின் கீழ் புத்தாக்க ஆய்வுகூடமொன்று நிறுவப்பட்டு புத்தாக்க உணர்வுகளை மேலும் வலுவூட்டத் தக்க வகையில் செயற்படுத்தப்படுகிறது.
ஆசிரிய ஆளணியானது மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப மேலதிகமாக காணப்பட்டாலும் கூட பாடரீதியாக பல்வேறு ஆசிரியர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. குறிப்பாக தகவல் தொடர்பாடல் பாடத்தினை கற்பிப்பதற்கு ஆசிரியர் நியமிக்கப்படாத வேளையிலும் பாடசாலையிலுள்ள சிறப்புப் பட்டத்தினை பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தரை கொண்டே கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் நடைபெறுகின்றது. அது மாத்திரமல்லாமல் மாணவர்களிடம் காணப்படும் இயலுமைகளையும் இயலாமைகளையும் இனஙகண்டு வழிப்படுத்தும் செயற்பாட்டில் ஈடுபடுவதானது இப்பாடசாலையின் தனிச்சிறப்பாகும். இந்த வகையிலே இப்பாடசாலையிலே தரம்10,11,12யில் கற்கின்ற மாணவர்கள் இப்பாடசாலைக்கென்று தரவுத்தளம் ஒன்றினை உருவாக்கும் இந்த உயரிய செயற்பாட்டில் ஈடுபடுவதானது பாராட்டத்தக்க செயற்பாடாகும். இம்மாணவர்கள் அனைவரும் இந்த நாட்டின் எதிர்கால சிற்பிகளாக விளங்குவதற்கு எனது பாராட்டுக்களை தெரிவிக்கிறேன். அத்தோடு அம்மாணவர்களுக்கு வழிகாட்டியாக செயற்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் MRS. UF. MINOSA அவர்களுக்கும் தேவையான போது ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் வழிகாட்டலையும் வழங்கிய வலயக்கல்வி பணிப்பாளர் MR. MS.SAHTHUL NAJEEM அவர்களுக்கும் உதவிக்கல்வி பணிப்பாளராக பணியாற்றும் MRS. ASMA MALIK அவர்களுக்கும் ஏனைய பிரதி,உதவி கல்வி பணிப்பாளர்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு.மீ.லெ.பதியுத்தீன்(SLPS-I)
அதிபர்
கமு /கமு/ அல்- அக்ஸா ம.ம.வி ..





